News Just In

12/07/2024 03:48:00 PM

தேசியதலைவருக்கு வணக்கம் கூறி கன்னி உரையாற்றினார் மட்டக்களப்பு எம் பி வைத்தியர் இ.ஶ்ரீநாத்

தேசியதலைவருக்கு வணக்கம் கூறி கன்னி உரையாற்றினார் மட்டக்களப்பு எம் பி வைத்தியர் இ.ஶ்ரீநாத்.


இலங்கையில் ஏற்பட்ட இறுதி யுத்தத்தில் உயிர் நீத்த தமது உறவுகளுக்கும், எமது தேசிய தலைவருக்கும் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன் என கூறி நாடாளுமன்றில் நேற்று(06.12.2024) உரையாற்றும் போது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி ஶ்ரீநாத் கூறினார் அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்து தமது உரையில் இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரில், தமிழ் மக்கள் சொல்லொணா துயரத்தை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

''கடந்த காலங்களில் ஆட்சி செய்தவர்கள் தங்களின் சுயலாப நோக்கத்திற்காகவே செயற்பட்டனர்.இதனால் எமது மக்கள் புறக்கணிக்கப்பட்டு, பெரும் சிக்கல்களை சந்தித்தார்.

முன்னதாக, ஜனாதிபதி அவரது அக்கிராசன உரையில் சகல மக்களுக்கும் ஒற்றுமையை வெளிப்படுத்தும், நம்பிக்கையளிக்கும் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அந்த விடயம் பாராட்டத்தக்கது" ஆனால் இனப்பிரண்சனை தொடர்பாக அவர் தமது உரையில் பேசவில்லை இது கவலையளிக்கிறது எனவும் மேலும் கூறினார்.

No comments: