News Just In

9/13/2025 02:22:00 PM

விடுதலைப் புலிகளிடம் இருந்த மொத்த கப்பல்கள்..! உண்மையை உடைத்த முன்னாள் கடற்படை அதிகாரி

விடுதலைப் புலிகளிடம் இருந்த மொத்த கப்பல்கள்..! உண்மையை உடைத்த முன்னாள் கடற்படை அதிகாரி



தமிழீழ விடுதலைப் புலிகளிடம் 26 கப்பல்கள் இருந்ததாகவும் ஆனால் இறுதி போரில் நிர்மூலமாக்கப்பட்ட 12 கப்பல்கள் தொடர்பிலேயே பேசப்படுவதாகவும் முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளரும் இறுதிப் போரில் வடக்கு கடற்படை முன்னிலை பாதுபாப்பு வலயத்தின் கட்டளையிடும் தளபதியாகவும் செயற்பட்ட டி. கே. பி. தசநாயக்க தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“தமிழீழ விடுதலைப் புலிகள் 30 வருட யுத்தக்காலப் பகுதியில் இருந்து இறுதிப் போர் வரை 26 கப்பல்களை சொந்தமாக வைத்திருந்தனர்.
அவை யுத்தத்தில் கடற்படையால் அழிக்கப்பட்டது. ஆனால், இறுதிப் போரில் 12 கப்பல் நிர்மூலமாக்கப்பட்டன. அவை மட்டுமே எமக்கு இப்போது ஞாபகத்தில் இருக்கிறது. இறுதி போரில் இந்திய கடற்படையின் ஆதரவிலேயே 12 கப்பல்கள் நிர்மூலமாக்கப்பட்டன.

மேலும் மூன்று கப்பல்கள் அவர்களிடம் இருந்தன. அந்த கப்பல்களின் இரண்டின் பெயர்கள் மாற்றப்பட்டது.

இறுதி போரின் பின்னர் மூன்றாம் நிலை தமிழீழ விடுதலைப் புலிகள் சிலர், குறித்த பெயர் மாற்றப்பட்ட இரண்டு கப்பல்களில் ஒரு தடவையில் 400 பேர்கள் என்ற வகையில் திறந்த விசா மூலம் மலேசியாவுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து இரண்டு கப்பல்கள் மூலம் கனடாவுக்கு அனுப்பப்பட்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.

No comments: