News Just In

12/07/2024 09:35:00 AM

பாடசாலை மாணவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

பாடசாலை மாணவர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!



அடுத்த வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு தைக்கப்பட்ட சீருடைகளை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவு அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி இதனை தெரிவித்துள்ளார்.
சீருடைகள்

பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று(06) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பாடசாலை சீருடைக்கான துணிகளை வழங்கும்போது அதில் பெருமளவிலான துணிகள் வீணடிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதனால் மாணவர்களுக்கு தைக்கப்பட்ட சீருடைகளை வழங்கும் தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்

No comments: