மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரட்ணசேகர திங்களன்று 25.11.2024 தனது உயர் மட்ட அதிகாரிகளுடன் விஜயம் செய்து மாவட்டச் செயலக அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஈடுபட்டார்.
மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா ஜுலேகா வின் ஒருங்கிணைப்பில் இடம் பெற்ற இந்தக் கலந்துரையாடலில், மாவட்டத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப் பட வேண்டிய செயற்திட்டங்கள் தொடர்பாக ஆளுநர் தெளிவுபடுத்தினார்.
மேலும், அங்கு கருத்துத் தெரிவித்த ஆளுநர், இன மத பேதமின்றி நாம் இலங்கையர் எனும் அடிப்படையில் ஊழலற்ற தூய்மையான சேவையை மக்களுக்கு வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.பி மதநாயக்க, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.பி மதநாயக்க, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், உயரதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
No comments: