விசேட தேவையுடைய மாணவர்களுக்கு சக்கர நாற்காலி வழங்கி வைப்பு
(ஏ.எச்.ஏ. ஹுஸைன் )
மட்டக்களப்பில் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தினால் சக்கர நாற்காலிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா ஜுலேகா தலைமையில் புதிய மாவட்ட செயலகத்தில் இந்நிகழ்வு திங்களன்று 25.11.2024 இடம்பெற்றது.விசேட தேவைக்குரிய மாணவர்களின் அன்றாட செயற்பாடுகளை இலகுபடுத்துவதன் மூலம் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்கு வைத்தியர்கள் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர்களின் கோரிக்கைக்கு அமைவாக இந்த சக்கர நாற்காலிகள் வழங்கி வைக்கப்பட்டது.
பொருளாதார ரீதியில் நலிவுற்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி மேம்பாட்டினை நோக்காகக் கொண்டு பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையம் பல செயற்றிட்டங்களை மேற்கொண்டு வருவதாக நிகழ்வில் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்வில் பாரி அறக்கட்டளை நிறுவனத்தின் பணிப்பாளர் ச. நிகேஷ், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் சந்திரகலா கோணேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments: