News Just In

11/06/2024 10:50:00 AM

சூடு பிடிக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - முன்னிலை வகிக்கும் வேட்பாளர்!

சூடு பிடிக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் - முன்னிலை வகிக்கும் வேட்பாளர்



அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் தற்போது வெளியாகி கொண்டிருக்கின்றன.

ஜனாதிபதி வேட்பாளர்களான டொனால்ட் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸிற்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளின்படி டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை வகிக்கிறார் இன்னும் முடிவுகள் வெளிவராத மாநிலங்களின் நிலவரங்கள் பாரியளவான மாற்றங்களை ஏற்படுத்தலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவற்றிலும் பல மாநிலங்களில் ட்ரம்ப் முன்னிலை வகிப்பதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அதற்கமைய ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் ட்ரம்ப் 230 இடங்களையும் குடியரசு கட்சியின் சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் 205 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். அவரில் 270 பேரின் ஆதரவை பெறும் வேட்பாளர் அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவுள்ளார்.

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், 16 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 7 கோடிக்கும் அதிகமானோர் ஏற்கனவே வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: