News Just In

11/20/2024 05:15:00 PM

மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்களின் விஞ்ஞான செயற்றிட்ட கண்காட்சி

மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்களின் விஞ்ஞான செயற்றிட்ட கண்காட்சி




மட்டக்களப்பு கல்வி வலய பாடசாலை மாணவர்களின் விஞ்ஞான செயற்றிட்ட கண்காட்சி, மட்டக்களப்பு இந்துக் கல்லூரியில் இன்று ஆரம்பமானது.
மாகாண கல்வி பணிப்பாளரும் மட்டக்களப்பு கல்வி வலய கல்விப் பணிப்பாளருமான சுஜாதா குலேந்திரகுமாரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ்,மட்டக்களப்பு வலயக் கல்வி அலுவலக விஞ்ஞான பிரிவின் ஒழுங்குபடுத்தலில், வலய கல்வி அலுவலக விஞ்ஞான வளவாளர் ரதிவதனா முருகதாஸின் ஒருங்கிணைப்பில்,பாடசாலை மாணவர்களின் விஞ்ஞான செயற்திட்ட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளின் பங்களிப்புடன் இன்றும், நாளையும் இக் கண்காட்சியைப் பார்வையிட முடியும். கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் மட்டக்களப்பு வலய இணைபாடவிதான கல்வி அபிவிருத்தி பிரதி கல்வி பணிப்பாளர் என்.குகதாசன், மட்டக்களப்பு இந்து கல்லூரி அதிபர் ம.பகீரதன் மற்றும் பொறுப்பாசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்

No comments: