News Just In

11/13/2024 06:40:00 PM

வெள்ளத்தில் மூழ்கியது மூதூர் கட்டைப்பறிச்சான் பாலம் !


வெள்ளத்தில் மூழ்கியது மூதூர் கட்டைப்பறிச்சான் பாலம் !



மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கட்டைபறிச்சான் இறால் பாலம் தாழிறங்கி முற்றாக நீரில் மூழ்கியுள்ளது. இதனால் அப்பாலத்தின் வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இப்பாலத்தில் ஊடாகவே பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் உட்பட பலரும் பிரயாணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

20க்கு மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்கள் தமது அன்றாட தேவைகளுக்காக இந்த பாலத்தினை பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், நாளை (14) நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக மக்கள் இப்பாலத்தின் ஊடாகவே செல்லவேண்டியுள்ளது.

இதனால் தேர்தலில் வாக்களிக்க இயலாமல் கூட போகலாம் என்றும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இப்பாலத்தில் வெள்ள நீர் அதிகரித்துள்ளதனால் ஆபத்தான நிலையில் பொது மக்கள் இந்த பாலத்தினூடாக செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அடையாளம் காண முடியாதபடி பாலம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதனால், பாலத்தின் இரு கரைகளையும் கண்டுகொள்ள முடியாமல் நடைபயணம் மேற்கொள்வதில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

எனவே, பொதுமக்கள் சென்று வருவதற்கு ஏற்ற வகையில் இந்த பாலத்தினை மீட்டுத் தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

No comments: