News Just In

11/04/2024 06:26:00 PM

வரலாறு காணாத தங்க விலை அதிகரிப்பு!

மத்திய கிழக்கில் போர் பதற்றம்! அதிர்ச்சியூட்டும் வரலாறு காணாத தங்க விலை அதிகரிப்பு


மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்ற நிலை காரணமாக உலகளவில் தங்கத்தின் விலையில் மிக வேகமான அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, இலங்கையிலும் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், தங்கம் ஒரு அவுன்சின் விலையானது, இலங்கை ரூபாவின் படி 802,401.19 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், வரலாற்றில் முதல் தடவையாக 24 கரட் மற்றும் 22 கரட் தங்கத்தின் விலையானது கடந்த ஒரு சில நாட்களாக 200,000 ரூபாவை தாண்டியுள்ளது.

ஒக்டோபர் 31ஆம் திகதி வரை செட்டித்தெரு தங்க விலை நிலவரப்படி 24 காரட்டின் விலை 220,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. இது புதிய உச்ச விலை நிலவரமாகும்.

அத்துடன், 22 கரட் தங்கத்தின் விலையும் 200,000 ரூபாவிற்கும் அதிகமாக பதிவாகியுள்ளது.

இந்தநிலையில், இன்றையதினம் 24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது, 226,900 ரூபாவாகவும், 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 208,050 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்துடன், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 198,600 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.

இதேவேளை, ஆபரணத் தங்கத்தின் விலையானது இந்த விலைகளில் இருந்து சற்று மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது

No comments: