News Just In

11/04/2024 06:20:00 PM

இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவி ஊடாக மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்ட சத்திர சிகிச்சை பிரிவு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது

 இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவி ஊடாக மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்ட சத்திர சிகிச்சை பிரிவு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது 


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)
இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவி ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட சத்திர சிகிச்சைப் பிரிவு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கலாரஞ்சனி கணேசலிங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அங்குரார்ப்பண நிகழ்விற்கு பிரதம அதிதியாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா கலந்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய கலாநிதி பாலித்த குணரத்ன மகிபால, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜஸ்டினா ஜுலேகா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
சுமார் 320 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடத் தொகுதியில் 4 சத்திர சிகிச்சைக் கூடங்கள் காணப்படுகின்றன.
அவற்றை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் அவரது பாரியார் உள்ளிட்ட சிறப்பு அதிதிகள் பார்வையிட்டதுடன், வைத்தியசாலை நிருவாகத்தினரால் உயர்ஸ்தானிகர் மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மோப்ப நாய்கள் மூலம் வைத்தியசாலை வளாகம் பரிசோதிக்கப்பட்டதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

No comments: