News Just In

11/09/2024 10:09:00 AM

வைத்தியர் அர்ச்சுனாவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு இளைஞர்கள் எதிர்ப்பு..!


வைத்தியர் அர்ச்சுனாவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு இளைஞர்கள் எதிர்ப்பு..!


சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா தமைமையிலான சுயேட்சைக் குழுவினரின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்கு இளைஞர்கள் சிலர் தமது எதிர்ப்பை தெரித்த சம்பவம் சாவகச்சேரியில் பதிவாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்கள் தற்போது மும்முரமாக தமது பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அந்தவகையில், சுயேட்சை குழு 17 முதன்மை வேட்பாளராக போட்டியிடும் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட குழுவினர் யாழ். சாவகச்சேரி நகரில் பிரசார நடவடிக்கையில் நேற்றையதினம்(08) ஈடுபட்டிருந்த போது அவர்களுக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சாவகச்சேரி நகரில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள சில இளைஞர்களே இதன்போது எதிர்ப்பை வெளியிட்டனர்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் இடம்பெற்ற போராட்டத்தின்போது முன்னின்று உதவியவர்களைப் புறந்தள்ளி வைத்தியர் அர்ச்சுனா புதியவர்களை இணைத்துள்ளமையையும், அவரது செயற்பாடுகளையும் எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் இதன்போது கண்டித்தனர்.

இதேவேளை அவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இராமநாதன் அர்ச்சுனா உள்ளிட்ட குழுவினர் தமது பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது

No comments: