நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக களம் இறங்கியுள்ள ஒருவர் நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் (Jaffna) வைத்து 49 வயதான சந்தேகநபர் நேற்று (12.11.2024) கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரி பிரதேசத்தில் வசிக்கும் நபரொருவர் காவல் நிலையத்தில் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குருநகரை சேர்ந்த குறித்த வேட்பாளர் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக ஒருவரை ஏமாற்றி 5 இலட்சம் ரூபா நிதி மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
No comments: