கடந்த ஓரிரு தினங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்த கன மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல முக்கிய இடங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டிருந்தன. புதனன்று பதிவாக்கப்பட்ட காட்சிகள் இவை.
முக்கிய இடங்களான மட்டக்களப்பு விமான நிலைய சுற்றுப்பகுதி, மத்திய பஸ் தரிப்பிடம், மட்டககளப்பு நகர பொதுச் சந்தை, அரசடிச் சந்தி கிழக்குப் பல்கலைகக்கழக மருத்துவ பீட சுற்றுவட்டப் பகுதி, கல்லடி, காத்தான்குடி - நொச்சிமுனை, மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலையில் சித்தாண்டி, வந்தாறுமூலை - கொம்மாதுறை, மட்டக்களப்பு பதுளைவீதிப் பகுதியில் மாவடிஓடை, ஈரலக்குளம், வன்னாத்திஆறு, வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் கன்னங்குடா, கரையாக்கன்தீவு, பண்டாரியாவெளி எனப் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
இதேவேளை பொலன்னறுவை மாவட்டத்திலும் பெய்துவரும் மழை காரணமாக மட்டக்களப்புக்கும் பொலொன்னறுவைக்கும் இடையேயான புகையிரதப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது
No comments: