முல்லைத்தீவு பகுதியில் ஆட்களற்ற வீடொன்றுக்குள் இருந்து சிறுத்தையொன்று மீட்கப்பட்டுள்ளது.
விசுவமடு ) இளங்கோபுரம் பகுதியில் குறித்த சிறுத்தையினை நேற்றையதினம் (27 - 11 - 2024) காலை அவதானித்த பிரதேச வாசிகள் உரிய அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
சிறுத்தை மீட்பு
இதனையடுத்து கிளிநொச்சியிலுள்ள வனஜீவராசிகள் சங்க உத்தியோகத்தர்கள் சம்பவ இடத்திற்கு சென்று நீண்ட போராட்டத்தின் மத்தியில் சிறுத்தையினை மீட்டுள்ளனர்.
பின்னர் சிறுத்தைக்கு சிகிச்சை வழங்கியதுடன் அதனை பாதுகாப்பாக வனப்பகுதியில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
No comments: