ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பார்வையிடுவதற்காகசிறைச்சாலைக்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி மகிந்த
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பார்வையிடுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார்.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அண்மையில் (23) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், மகிந்த ராஜபக்ச இன்று அவரை சந்திக்க சென்றுள்ளார்.
இலங்கையில் சட்டவிரோதமாக ஒருங்கினைக்கப்பட்ட BMW ரக கார் தொடர்பாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பில் தனியார் ஹோட்டல் ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட குறித்த கார் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதன்படி சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு வாக்குமூலம் வழங்க வந்த போதே அவர் கைது செய்யப்பட்டார்.
அவரை கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர் எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது
10/25/2024 07:46:00 PM
Subscribe to:
Post Comments (Atom)
No comments: