News Just In

10/22/2024 07:24:00 PM

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! மீண்டும் ராஜபக்சக்கள் மீது திரும்பும் கவனம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! மீண்டும் ராஜபக்சக்கள் மீது திரும்பும் கவனம்



2019ஆம் ஆண்டு இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் தொடர்பான பொறுப்பினை ராஜபக்சர்கள் மீது சுமத்துவதற்கு பலர் முயற்சித்து வருகின்றனர். அரசியலுக்காக இந்த குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று கூறப்படும் விடயத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்று பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சி காரியாலயத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. அதிகாரத்தை கைப்பற்றுவதற்காகவே குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

குண்டுத் தாக்குதல்களின் பொறுப்பினை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மீது பொறுப்பாக்குவதற்கு ஒருசில மத தலைவர்களும், அரசியல் கட்சிகளும் ஆரம்பத்தில் இருந்து பல முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

2019 ஆம் ஆண்டு குண்டுத்தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலின் போதே தனது அரசியல் பலத்தை உறுதிப்படுத்தியது

No comments: