News Just In

10/22/2024 07:20:00 PM

ரணிலுக்கு எதிராக இரு வழக்குகள்: உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!


ரணிலுக்கு எதிராக இரு வழக்குகள்: உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு




சோசலிச இளைஞர் சங்கம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்களில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதிவாதியாக பெயரிடுவதற்கு உயர் நீதிமன்றம் இன்று (22) அனுமதி வழங்கியுள்ளது.

2022 ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின் போது போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைக்கு எதிராகவே இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சோசலிச இளைஞர் சங்கம் சங்கத்தின் உறுப்பினர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மனுதாரர்களின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கையை பரிசீலித்து இந்த அனுமதி பெறப்பட்டுள்ளது

No comments: