News Just In

10/24/2024 04:18:00 PM

அமெரிக்க தமிழ் மக்கள் கமலா ஹரிஸூக்கு வாக்களியு ங்கள் !

அமெரிக்க தமிழ் மக்கள் கமலா ஹரிஸூக்கு வாக்களித்து எங்கள் இறையாண்மையை மீட்டு எங்கள் காணமல் போன குழந்தைகளை கண்டறிய உதவுங்கள் - தமிழர் தாயக காணமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர்



அமெரிக்க தமிழ் மக்கள் கமலா ஹரிஸிக்கு வாக்களித்து எங்கள் இறையாண்மையை மீட்டு எங்கள் காணமல் போன குழந்தைகளை கண்டறிய உதவுங்கள் என தமிழர் தாயக காணமல் ஆக்கப்படடோர் சங்கத்தினர் தெரிவித்தனர்.

இன்று வியாழக்கிழமை (24) வவுனியாவில் இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு கமலா ஹரிஸூக்கு ஆதரவளித்து, தமிழ் இறையாண்மையைப் பாதுகாக்கவும், காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் குழந்தைகளைக் கண்டறியவும் ஹரிஸ் உதவுவார் என் நம்புகிறார்கள்.

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ்க் குழந்தைகளைக் கண்டறியவும், எதிர்கால இனப்படுகொலையில் இருந்து தமிழர்களைக் காப்பாற்றவும், தமிழர் இறையாண்மைக்காக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெறவும் எமது தொடர் போராட்டம் இன்று 2,804வது நாளாகும். வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக, ஏ-9 வீதியில் உள்ள இந்த பந்தலில் எமது பயணம் தொடர்கிறது.

வவுனியாவில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள், கமலா ஹரிஸின் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான முயற்சியில் அவருக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளனர். தமிழ் இறையாண்மைக்கு நீதி வழங்கவும், காணாமல் ஆக்கப்பட்ட அவர்களின் குழந்தைகளை கண்டறிய உதவவும் அவரது தலைமையால் முடியும் என்று நம்புகிறார்கள்.

No comments: