News Just In

10/30/2024 05:09:00 PM

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிற்கு பிணை!




விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை பிணையில் விடுவிக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(30) உத்தரவிட்டது.

தலா 5 மில்லியன் ரூபா பெறுமதியான 5 சரீரப்பிணைகளில் முன்னாள் அமைச்சரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பதிவு செய்யப்படாத அதிசொகுசு காரொன்று கொழும்பிலுள்ள ஹோட்டலொன்றில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கடந்த 23ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்

No comments: