மட்டு.வின்சென்ட் பெண்கள் தேசிய பாடசாலையில், தமிழ்த் தினப் போட்டிகளில் சாதனை படைத்த மாணவிகளைக்கௌரவிக்கும் நிகழ்வு
அகில இலங்கை தமிழ்த் தின போட்டியில், தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு, இன்று, மட்டக்களப்பு வின்சென்ட் பெண்கள் தேசியப் பாடசாலையில், இன்று காலை நடைபெற்றது.
தேசிய நிலையில், தமிழறிவு வினாவிடைப் போட்டியில் முதலிடத்தையும், தனி நடனம் பிரிவு இரண்டில், இரண்டாம் இடத்தையும், குழு இசையில் மூன்றாம் இடத்தையும் மற்றும் இலக்கிய நாடகப் போட்டியில் மூன்றாம் இடத்தையும், வின்சென்ட் மாணவிகள் சுவீகரித்துக்கொண்டனர்.
தேசிய ரீதியில் சாதித்த மாணவிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு, பாடசாலை அதிபர் உதயகுமார் தவத்திருமகள் தலைமையில் நடைபெற்றது. பாடசாலை முன்றலில் இருந்து மாணவிகள் பாண்ட் வாத்திய இசையுடன் அழைத்துவரப்பட்டு, பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். மாணவிகளுக்குப் பயிற்றுவித்த ஆசிரியர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
பிரதி அதிபர்கள் பாடசாலை அபிவிருத்தி குழு செயலாளர் உட்பட உறுப்பினர்கள், பாடசாலை பழைய மாணவ சங்க உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவிகள்,பெற்றோர்கள் என பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments: