News Just In

10/16/2024 06:52:00 PM

பகிரங்கமாக வெளியிடுவதாக அரசாங்கம் உறுதியளித்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவேன் ! உதயகம்மன்பில


பகிரங்கமாக வெளியிடுவதாக அரசாங்கம் உறுதியளித்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவேன் உதயகம்மன்பில



அரசாங்கம் பகிரங்கமாக வெளியிடுவதாக உறுதியளித்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை வெளியிடப்படாத தன்னிடமுள்ள இரண்டு அறிக்கைகளையும் கையளிக்க தயார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

என்னிடமுள்ள அறிக்கையை பெற்றுக்கொண்ட பின்னர் அதனை அரசாங்கம் பகிரங்கப்படுத்தாவிட்டால் என்ன நடக்கும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதியோ அமைச்சரவை பேச்சாளரோ நான் வழங்கும் அறிக்கைகளை வெளியிடுவோம் என உறுதியளிக்கும் வரை நான் அரசாங்கத்திடம் அவற்றை கையளிக்க தயாரில்லை என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

நான் வேண்டுகோள் விடுத்தபடி ஏழுநாட்களிற்குள் அறிக்கைகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்காவிட்டால், நான் அவற்றை இணையத்தில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments: