இலங்கை தமிழரசுக்கட்சி என்பது சுமந்திரனின் தனிப்பட்ட கம்பனி.தனிப்பட்ட இந்த கம்பனியில் அவர் தலைவராக இருக்கிறார்.எனவே வீட்டுக்கு வாக்களிப்பதா அல்லது கம்பனிக்கு வாக்களிப்பதா என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்.
இவ்வாறு இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் மத்திய குழு உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்தார். ஐபிசி களம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக்கட்சியில் தமிழ் தேசியம் என்பது தற்போது அறவே இல்லை. அப்படி இருந்திருந்தால் கடந்த 06 ஆம் திகதி நான் கட்சியை விட்டு விலகியிருக்கமாட்டேன்.நான் ஒருபோதும் பதவி கேட்டு அலைபவன் அல்ல.பதவிக்காக கட்சியை விட்டு விலகியது என குற்றம் சாட்டுவது பொய்யானது.
சம்பந்தனுக்கு உள்ள குணமே சுமந்திரனிடமும் உள்ளது.அதாவது காலையில் ஒன்றும் மாலையில் ஒன்றையும் பேசுவது.இதனை மக்கள் பார்த்து கொண்டிருக்கின்றார்கள்.
No comments: