News Just In

10/15/2024 05:13:00 PM

உங்களால் என்ன செய்ய முடியுமென்பதை மட்டும் கூறுங்கள்!

என்ன செய்ய முடியுமென்பதை மட்டும் கூறுங்கள்?



இலங்கை தமிழ் அரசு கட்சி தொடர்ந்தும் குழப்பங்களின் கூடாரமாகிக் கொண்டிருக்கின்றது. ஓர் அணியினர் வெளி யேறியிருக்கும் நிலையில் இன்னொரு புதிய வழக்கை எதிர் கொள்ளக் கூடிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. பாரம்பரிய கட்சியொன்று சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான எம்.ஏ. சுமந்திரன், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் மீது விரல் நீட்டிக் கொண்டிருக்கின்றார். அதற்கு அவர்கள் பதிலளித்திருக்கின்றார்கள்.

இதற்கிடையில் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிவிடும் வேலையை பொதுச் சபை என்னும் பெயரில் தங்களை அடையாளப்படுத்துபவர்கள் செய்துகொண்டிருக்கின்றனர். சங்குச் சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியை எதிர்க்க வேண்டும் என்பது மட்டும்தான் அவர்களது நோக்கம் போல் தெரிகின்றது. ஒன்றை எதிர்க்கின்ற போது, அது இன்னொருவருக்கான ஆதரவாக மாறுகின்றது என்னும் சாதாரண உண்மையைக் கூட புரியாமல் அவர்கள் இதனை செய்யவில்லை என்றே தெரிகின்றது. தமிழ் அரசு கட்சி மோசமான குழப்பங்களின் கூடாரமாகிக் கொண்டிருக்கும் நிலையில், அடுத்தவர்களை நோக்கி எவ்வாறு விரல் நீட்ட முடியும்? எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தால் உருவாக்கப்பட்ட கட்சி அதன் அடிப்படைகள் அனைத்தையும் இழந்து வெறும் தேர்தலுக்கான கட்சியாக மாறிவி;ட்டது.

அந்த நிலையைக் கூட எதிர்காலத்தில் தமிழ் அரசு கட்சியால் பேணிப் பாதுகாக்க முடியுமா என்பதும் கேள்விக்குறிதான். தமிழ்த் தேசியத்தை முன்வைத்து அரசியலை முன்னெடுக்க முற்படுவர்கள் – முதலில் மற்றவர்களைப் பற்றிப் பேசுவதை விடுத்து, தங்களால் என்ன செய்யமுடியுமென்பதைக் கூற வேண்டும். இதுவரையில் தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் என்ன? – ஏன் அந்த முயற்சிகள் தோல்வியடைந்தன என்ப தைக் கூறவேண்டும். அவ்வாறில்லாது மற்றவர்களைப் பற்றியே பேசிக் காலத்தை கடத்தலாம் என்று எண்ணினால் அதன் பொருள், இவ்வாறு மேடைகளில் கத்துபவர்கள் எதனையும் ஆக்கபூர்வமாக முன்னெடுக்கவில்லை என்பதாகும். யுத்தம் முடிவுற்று பதினைந்து வருடங்கள் ஆகின்றன.

இ;ந்தக் காலத்தில் தமிழ் மக்கள் சார்பான அனைத்து முடிவுகளையும் சம்பந்தனும் அவருக்கு ஆதரவாக சுமந்திரனுமே முன்னெடுத்திருந்தார்கள். இந்தத் தீர்மானங்களில் ஏனைய கட்சி களின் தலைவர்கள் பெரியளவில் பங்குபற்றியிருக்கவில்லை. இந்த நிலையில் தனது நகர்வுகள் ஏன் தோல்வியுற்றன – தன்னால் ஏன் அரசியலை சரியாக புரிந்துகொள்ள முடியாமல் இருந்தது என்பதைத்தான் உற்றுநோக்க வேண்டும் ஆனால், இந்த விடயத்தை உற்று நோக்கும் துணிவில்லாத காரணத்தினால்தான், மற்றவர்கள் பற்றியே சதா பேசவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸூம் இதனைத்தான் இதுவரையில் செய்து வந்திருக்கின்றது. சற்று மாற்றி யோசியுங்கள். மற்றவர்களை பற்றிப் பேசுவதை விடுத்து, உங்களால் என்ன செய்ய முடியுமென்பதைப் பற்றிப் பேசுங்கள். மக்கள் நன்மையடைவார்கள்

No comments: