News Just In

10/18/2024 11:24:00 AM

15க்கு குறையாமல் ஆசனங்களை வெல்வோம் - தமிழ் அரசுக் கட்சி நம்பிக்கை : சகல தமிழ்த் தேசிய கட்சிகளும் 'சங்குக்கு' அஞ்சுகின்றன - சித்தார்த்தன்


15க்கு குறையாமல் ஆசனங்களை வெல்வோம் - தமிழ் அரசுக் கட்சி நம்பிக்கை : சகல தமிழ்த் தேசிய கட்சிகளும் 'சங்குக்கு' அஞ்சுகின்றன - சித்தார்த்தன்



எதிர்வரும் பொதுத்தேர்தலில் வீடு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் அரசுக் கட்சியினால் வட, கிழக்கு மாகாணங்களில் 15க்கு குறையாமல் ஆசனங்களை வென்றெடுக்க முடியும் என அக்கட்சியின் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேவேளை சங்கு சின்னத்தில் போட்டியிடும் தமது கூட்டணி இவ்விரு மாகாணங்களிலும் மொத்தமாக 6 - 8 ஆசனங்களை வெல்லும் என எதிர்பார்ப்பதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று இம்முறை தேர்தலில் தமது கட்சி 10க்கு குறையாத ஆசனங்களைப் பெறவேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இருப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

No comments: