News Just In

9/11/2024 08:00:00 PM

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய கிரிக்கெட் மைதானம் அமைக்க நடவடிக்கை!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

மட்டக்களப்பு ,கல்லடி சிவானந்த தேசிய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற பிக்போஸ் கிறிக்கட் தொடரின் இறுதிப் போட்டியில் முதன்மை விருந்தினர்களாக கலந்து கொண்ட செயற்திட்ட அபிவிருத்தி அமைச்சர் அலிசாகிர் மௌலானா அவர்களும் ,கிராமிய அபிவிருத்தி ராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் அவர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய மைதானமொன்றை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்

.மட்டக்களப்பு மாவட்டத்தில் வீரர்களுக்கு ஏற்ற நல்ல விளையாட்டு மைதானம் இல்லை என்கின்ற குறை ஏற்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஏற்பாட்டாளர்கள் இரண்டு அரசியல் பிரமுகர்களிடமும் தங்களுடைய தேவை குறித்த ஒரு மகஜர் ஒன்றையும் உத்தியோகபூர்வமாக கையளித்தனர்.

இதன் அடிப்படையில் மட்டக்களப்பில் ஸ்ரீலங்கா கிரிக்கட் சபையால் முன்னர் ஒதுக்கப்பட்டிருக்கின்ற 26 ஏக்கர்கள் கொண்ட ஒரு நிலப்பரப்பை மைதானமாக புனரமைத்துக் கொடுத்து மட்டக்களப்பில் கிரிக்கெட் விளையாட்டை அபிவிருத்திக்கு தங்களுடைய முழுமையான ஒத்துழைப்புகளையும் வழங்குவதாக இரண்டு அரசியல் பிரமுகர்களும் மேடையில் வாக்குறுதி அளித்துள்ளனர்.

No comments: