News Just In

9/02/2024 08:00:00 PM

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியில் ஓந்தாச்சிமடம் பகுதியில் விபத்து!

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதியில் ஓந்தாச்சிமடம் பகுதியில் பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.


(அஸ்ஹர் இப்றாஹிம்)
கடந்த ஞாயிறு (01) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்து களவாஞ்சிகுடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த விபத்தானது, மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் ஓந்தாச்சிமடத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, முச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவர் பலத்த காயங்களுக்குட்பட்ட நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்கைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும், விபத்தில் முச்சக்கர வண்டி சுக்குநூறாக நொருங்கியுள்ளதுடன், பஸ்ஸின் முன்பகுதிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், களுவாஞ்சிகுடி போக்குவரத்துப் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments: