கணித ஒலிம்பியாட் தேசிய மட்ட போட்டியிலும் , ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து சாதனை படைத்த தோப்பூர் -அல் ஸிபா வித்தியாலய மாணவன் பாஜீத் அன்சித் அஹமட்டையும் , 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற ஏனைய மாணவர்களையும், கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் என்.எம்.பாஜித் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
மூதூர் வலயக் கல்வி பணிப்பாளர் ,பிரதி கல்வி பணிப்பாளர் , உதவி கல்வி பணிப்பாளர்,தோப்பூர் கோட்டக்கல்வி பணிப்பாளர், அல்சிபா வித்தியாலயத்தின் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
No comments: