தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் பா.அரியநேத்திரனின் வேட்புமனு, சரத் பொன்சேகா போல் வெற்றியடைவதற்கானது அல்ல. ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக, இலங்கையில் நடைமுறையில் உள்ள தமிழ் மக்களின் குறைகளை உலகிற்கு காண்பிப்பதற்காக தமிழ் பொது ஜனாதிபதி வேட்பாளர் நிறுத்தப்பட்டிருக்கிறார்
இலங்கைப் பாராளுமன்றத்திலோ அல்லது தென்னிலங்கை அரசியல்வாதிகளாலோ இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என்பதை சரித்திரம், அணுகுமுறைகள் நன்றாக நிரூபித்துள்ளன. இவை கொழும்பு வாழ் தமிழ் அரசியல்வாதிகளுக்கு விளங்கப்போவதில்லை. இவர்கள் சுதந்திர தினத்தில் கலந்து கொண்டும், துடுப்பெடுத்து ஆடியும் என்னத்தை வடக்கு, கிழக்கு வாழ் மக்களுக்கு பெற்று கொடுத்தார்கள்?
No comments: