
(அஸ்ஹர் இப்றாஹிம்)
நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் திருமதி சகீலா இஸ்ஸடீன் அவ் வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதிக்கு ஈ.சீ.ஜீ.இயந்திரம் (ECG Machine )ஒன்றினை வழங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து அவ்வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடிய பணிப்பாளர் வைத்தியசாலையின் தேவைகள் மற்றும் குறைபாடுகளையும் கேட்டறிந்து கொண்டதுடன், அதில் அத்தியாவசிய தேவையாகவுள்ள சில விடயங்களை உடன் நிவர்த்தி செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் பதில் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.ஐ.எம். பௌஸ் ,பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், உயிரியல் மருத்துவப் பொறியியலாளர் என்.எம்.இப்ஹாம், கணக்காளர் திருமதி உசைனா பாரிஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்
No comments: