நூருல் ஹுதா உமர்
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் சிந்தனையில் கிழக்கிலங்கையில் வசிக்கின்ற சுற்றுலாத்துறையில் ஆர்வமிக்க இளைஞர் யுவதிகளுக்கு "கிழக்கின் சுற்றுலா மையம்" இப்பயிற்சி திட்டமானது மட்டக்களப்பு APAX CAMPUS-Language & Vocational Training Center ஏற்பாட்டில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக ஜனாதிபதி யின் செயற்குழு தலைவரும் "கிழக்கின் சுற்றுலா மையம்" இந்த கருப்பொருளை ஜனாதிபதி மட்டத்திற்கு எடுத்துச்சென்ற வரும் சமூக ஆர்வலருமான மோகன் கணபதிப்பிள்ளை பங்குபற்றி இருந்தார்.
நிகழ்ச்சித்திட்டத்தில் 150க்கு மேற்பட்ட இளைஞர் யுவதிகள் பங்குபற்றி இருந்ததுடன் அவர்களுக்கான விரிவுரைகள் அனுபவமும் தேர்ச்சியும் மிக்க விரிவுரையாளர்களை கொண்டு நடத்தப்பட்டது.
கிழக்கின் சுற்றுலா மையம் செயற்றிட்டமானது APAX CAMPUS-Language & Vocational Training Center இல் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. இந்நிகழ்ச்சி திட்டமானது கிழக்கிலங்கையின் சுற்றுலா துறை முன்னேற்றம் மற்றும் அந்நிய செலாவனியை அதிகரிக்க வழிவகுப்பதோடு அவர்களின் தொழில் மற்றும் வருமானத்தை அதிகரிக்க செய்வதையும் தொழில் அங்கத்துவத்தை வழங்குவதையும் பிரதான நோக்கமாக கொண்டுள்ளது.
இப்பயிற்சி நெறி முடிவில் அரச அங்கீகாரம் பெற்ற சான்றிதழ் வழங்கப்படுவதுடன் கிழக்கின் சுற்றுலா மையம் சுற்றுலா வழிகாட்டிக்கான உத்தியோகபூர்வ அடையாள அட்டை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: