அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகள், மட்டக்களப்பு சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி அமலநாயகி அமல்ராஜ் ஆகியோரை நேற்று சந்தித்து கலந்துரையாடினர்.
மட்டக்களப்பில் தமிழ் சமூகம் எதிர்கொள்ளும் காணி ஆக்கிரமிப்புக்கள், மனித உரிமை மீறல் பிரச்சனைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள், உள்ளக பொறிமுறையின் ஏமாற்றங்கள், சர்வதேச நீதிப்பொறிமுறை உட்பட அனைத்து விடயங்கள் தொடர்பாகவும் அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
No comments: