News Just In

8/17/2024 01:47:00 PM

ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவு!




அனைத்து அரச ஓய்வூதியர்களுக்கும் இடைக்கால கொடுப்பனவை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கையை பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார்.

ஒக்டோபர் மாதம் முதல் இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கையின் பிரதிகள் தேர்தல் ஆணையம், திறைசேரி மற்றும் ஓய்வூதிய திணைக்களத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அரச ஓய்வூதியர்களுக்கான இடைக்கால கொடுப்பனவாக 3000 ரூபாவை வழங்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது

No comments: