ஓய்வூதியம் பெறுவோருக்கு வழங்கப்பட வேண்டிய மூவாயிரம் ரூபா இடைக்கால கொடுப்பனவை தேர்தலின் பின்னர் வழங்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கொடுப்பனவுடன் இரண்டு தவணைகளையும் சேர்த்து செலுத்துமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது உத்தரவை மீறி கொடுப்பனவை வழங்குமாறு அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவித்தமை தொடர்பில் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு முன்னர் விளக்கமளிக்க வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
No comments: