எட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கின் விலை 35 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 240 ரூபாவாகும்.
ஒரு கிலோ கிராம் வெள்ளை கௌபியின் விலை 22 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 998 ரூபாவாகும்.
ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயம் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 265 ரூபாவாகும்.
ஒரு கிலோ கிராம் சிவப்பு கௌபியின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 940 ரூபாவாகும்.
ஒரு கிலோ கிராம் கீரி சம்பா அரிசியின் விலை 6 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 254 ரூபாவாகும்.
மேலும், சிகப்பு சீனி ஒரு கிலோ கிராமின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 370 ரூபாவாகும்.
ஒரு கிலோ கிராம் வெள்ளை 4 சீனியின் விலை ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 254 ரூபாவாகும்.
மேலும், ஒரு கிலோ கிராம் பருப்பின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 285 ரூபாவாகும்.
No comments: