News Just In

8/31/2024 02:03:00 PM

தரம் ஐந்து புலமைப்பரிசில் மாணவர்களுக்கான இலவச மாதிரி முன்னோடி வினாத்தாள்கள் வழங்கி வைப்பு



மாளிகைக்காடு செய்தியாளர்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் பொக்கிசம் அமையத்தின் இலவச கல்வித் திட்டத்தின் கீழ் தரம் ஐந்து புலமைப்பரிசில் (இவ்வாண்டு 2024) எழுதும் மாணவர்களுக்கான இலவச மாதிரி முன்னோடி வினாத்தாள்கள் கல்முனை கல்வி வலய காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை கல்வி கோட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

கல்முனை கல்வி வலயத்தில் உள்ள கல்முனை, சாய்ந்தமருது, காரைதீவு, மாளிகைக்காடு, பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு புலமைப்பரிசில் இலவச மாதிரி முன்னோடி வினாத்தாள்கள் அடங்கிய பொக்கிசம் அமையத்தின் இலவச மாதிரி முன்னோடி வினாத்தாள்கள் அடங்கிய பொதிகளை பொக்கிசம் அமையத்தின் கல்முனை ஒருங்கிணைப்பாளர் எம்.என்.எம்.அப்ராஸ் மற்றும் கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினர் நூருல் ஹுதா உமர் ஆகியோரினால் கடந்த வியாழன்(29) மற்றும் வெள்ளிக்கிழமை(30) பாடசாலை அதிபர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.

No comments: