அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் (தமிழ் தேசிய மக்கள் முன்னணி) கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று கூறி பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றார். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை!
15 வருடங்களாக ஒற்றையாட்சியை ஏற்றுக்கொண்டு செயல்பட்ட தரப்புக்களே, தமிழ் பொது வேட்பாளரை முன்னிறுத்தியிருப்பதாகவும், தமிழ் பொது வேட்பாளரின் முடிவு ஜம்பதாயிரம் மாவீரர்களுக்கும் உயிரிழந்த பொதுமக்களுக்கும் செய்யும் துரோகமாகும் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். ஒற்றையாட்சிக்குள் தேர்தலில் போட்டியிடுவது துரோகம் என்றால், அந்தத் துரோகத்தை செய்து கொண்டே, மற்றவர்களை நோக்கி துரோகக் கற்களை வீச முடியுமா? இலங்கைக்குள் மேற்கொள்ளப்படும் அனைத்து அரசியல் நடவடிக்கைகளுமே, ஒற்றையாட்சிக்குள்தான் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை இவர் புரிந்து கொள்ளவில்லையா ?
No comments: