எமது வரலாற்றில் பல எதிர்கட்சித் தலைவர்களை நாம் கண்டுள்ளோம். அவர்கள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் அரசாங்கத்தை விமர்ச்சிக்கவும் அரசாங்கத்தை எவ்வாறு கவிழ்க்கலாம் என்ற சிந்தனையில் இருப்பதையே நாம் கண்டுள்ளோம். இந்த எண்ணங்களிலிருந்து ஒரு மாற்றத்தை மாற்றிக் காட்டியவர் சஜித் பிரேமதாச என்று பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து நேற்று (26) கந்தளாய் பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
இன்று எல்லாரும் கேட்கும் விடயம் சிஸ்டம் சேன்ஞ்சாகும். பலர் மேடைகளிலும், போராட்டங்களிலும் நடைமுறை மாற்றம் பற்றி பேசினாலும் தேர்தல் ஒன்று வரும்போது அதை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. ஆனால் ஜனாதிபதி வேட்பாளர்களில் குறிப்பாக, சஜித் பிரேமதாச என்பவர், வரலாற்றில் முதன்முறையாக அந்த நடைமுறை மாற்றத்தை மாற்றிக் காட்டியது மட்டுமல்லாமல் செய்து காட்டியவரும் அவரேயாகும். அந்தப் பெருமை சஜித் பிரேமதாசவை மட்டுமே சாரும்.
கொவிட் பிரச்சினையாக இருந்தாலும் சரி, பொருளாதார நெருக்கடியாக இருந்தாலும் சரி எந்தக் காலத்திலும் விமர்சன அரசியலைச் செய்யவில்லை.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்துகொண்டு நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளுக்கும், வைத்தியசாலைகளுக்கும் ஏனைய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க உதவ முடியுமாக இருந்தால், ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் எவ்வாறான அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்வார் என்பதை நாங்கள் சிந்திக்க வேண்டும் என்றார்

No comments: