News Just In

8/09/2024 11:22:00 AM

சம்மாந்துறை பிரதேசத்தின் பின்தங்கிய கிராமங்களில் பயறு செய்கை வேலைத்திட்டம்!


சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பாசிப் பயறு பயிர்ச்செய்கை வேலைத் திட்டம் ஆரம்பம்


(அஸ்ஹர் இப்றாஹிம்)

சம்மாந்துறை பிரதேசத்தின் பின்தங்கிய கிராம புறங்களில் வாழ்கின்ற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக விவசாய அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற பாசிப் பயறு பயிர்ச்செய்கை வேலை திட்டம் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வானது கல்லைரச்சல் -2 கிராம சேவகர் பிரிவில் மயில் ஓடை வட்டையில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முகம்மது ஹனீபா தலைமையில் இடம் பெற்றது.

இன் நிகழ்விற்கு கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், விவசாய விரிவாக்கல் நிலைய பொறுப்பதிகாரிகள் (சம்மாந்துறை, மல்வத்தை) விவசாய போதனாசிரியர்,(மத்தி, மாகாணம்) பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் விவசாயிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

No comments: