மட்டக்களப்பில் இடம்பெற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரசார கூட்டத்தில் ரணிலுக்கு கற்பித்த ஆசிரியர் ஒருவர் மேடையேறிய நிகழ்வு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு கொழும்பு றோயல் கல்லூரியில் கற்பித்த வி.சிவலிங்கம் என்ற ஆசிரியரே இவ்வாறு மேடையேறியுள்ளார்.
தற்போது குறித்த ஆசிரியரின் வயது 98 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மேடையேறிய ஆசிரியரை கூட்டத்தில் பங்கேற்ற அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைவரும் வியப்புடன் பார்த்ததோடு அவருக்கு எழுந்து நின்றும் மரியாதை செலுத்தியும் உள்ளனர்.
No comments: