News Just In

8/12/2024 01:57:00 PM

கிழக்கு மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு மகத்தான வரவேற்பு!

தேசிய மட்டத்திற்கு தெரிவான கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவர்களுக்கு மகத்தான வரவேற்பும் கெளரவமும்


(எம்.எம்.ஜெஸ்மின்)
கல்முனை அல் மிஸ்பாஹ் பாடசாலையின் மாணவர்கள் தேசிய மட்டத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மெய்வல்லுனர் வீரர்கள் மற்றும் பெட்மின்டன் வீரர்களை வரவேற்பளித்து கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் பாடசாலையின் அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு, பழைய மாணவர் சங்கம் மற்றும் கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றினால் ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றது.

இந்நிகழ்வில் பங்குகொண்ட மாணவர்களை கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் தலைமையிலான நிருவாக குழுவினர், பாடசாலை நிருவாகத்தினர்கள், வர்த்தகர்கள், விளையாட்டுக் கழகங்கள், மற்றும் தனியார் நிறுவனங்கள்,கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி அதிபர் ஆசிரியர்கள் கெளரவித்தனர்.

No comments: