News Just In

8/01/2024 02:09:00 PM

திருக்கோணேஸ்வர ஆலய வரலாற்றுப் படிப்பினை சம்பந்தமான போட்டியும் பரிசளிப்பும்!




(அஸ்ஹர் இப்றாஹிம்)

திருகோணமலை பரடைஸ் பாலர் பாடசாலையின் 9வது ஆண்டு நிறைவை முன்னிட்டுதிருக்கோணேஸ்வர ஆலய வரலாற்றுப் படிப்பினைகளை இளைய தலைமுறைக்கு ஊடுகடத்தும் நோக்கில் வினாவிடைப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் அண்மையில் திருகோணமலை ஆர்.கே.எம்.ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக்கல்லூரியில் இடம்பெற்றிருந்தது..

நிகழ்வில் ஆன்மீக அதிதியாக குருமகா சந்நிதான தென்கயிலை ஆதின குரு முதல்வரான தவத்திரு அகத்தியர் அடிகளாரும்,
பிரதம விருந்தினராக, யாழ்ப்பாணம் சிவபூமி அறக்கட்டளை தலைவரான செஞ்சொற் செல்வர் திரு. ஆறு திருமுகன் அவர்களும்,

சிறப்பு விருந்தினர்களாக,
வரலாற்று ஆய்வாளரான என்.கே.எஸ்.திருச்செல்வம், சட்டத்தரணி உமாகரன் இராசையா,மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் திருமதி லக்ஷ்மிதேவி சிறிதரன்ஆகியோரும்மற்றும்மாணவர்கள்,பெற்றோர்கள் என பலரும்
கலந்து சிறப்பித்திருந்தனர்

No comments: