(அஸ்ஹர் இப்றாஹிம்)
மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட அறநெறிப்பாடசாலைமாணவர்களின்ஆக்கத்திறனைவெளிக்கொணரும்போட்டிகளில் களுவாஞ்சிகுடிசைவ மகாசபை அறநெறிப்பாடசாலை
மாணவர்கள் தங்கள் திறமைகளைவெளிப்படுத்தியுள்ளார்கள்.
பேச்சாற்றல்,கதாப்பிரசங்கம்நீதிநூல்ஒப்புவித்தல்,பண்ணிசை,சொல்லாடல்திறன்,நாடகம்,வில்லிசை,பரதநாட்டியம்ஆகிய அனைத்து பிரிவுகளிலும்
தமது திறமைகளை வெளிப்படுத்திவெற்றி பெற்றுள்ளார்கள்.
கடந்த 72 வருடங்களாக களுவாஞ்சிகுடி பிரதேசத்தில்சமயப்பணி சமூகப்பணி கல்விப்பணிஎன தொண்டாற்றிவரும்களுவாஞ்சிகுடி சைவ மகா சபை
தற்போது கிழக்கு பல்கலைக்கழகசிரேஸ்ர விரிவுரையாளர்க.மதிசீலன் அவர்களது தலைமையில்பல்வேறு சாதனைகளைப் புரிந்துவருவது குறிப்பிடத்தக்கது.
அந்தவகையில் சைவமகா சபைஅறநெறிப்பாடசாலையின் இந்த
வெற்றிகளுக்கு காரணமானஅறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள்
சைவ மகாசபையினர் மற்றும்பட்டிருப்பு மத்திய மகா வித்தி
யாலயம் களுவாஞ்சிகுடி. , களுவாஞ்சிகுடி சரஸ்வதி வித்தியாலயம், களுவாஞ்சிகுடி விநாயகர் வித்தியாலயம், களுவாஞ்சிகுடி மாரியம்மன் வித்தியாலயம் ஆகியபாடசாலைகளைச் சேர்ந்தமாணவர்கள் ,ஆசிரியர்கள், அதிபர்கள் பெற்றோர்கள் மற்றும்சைவ மகா சபை தலைவர் க.மதிசீலன் ஆகியோர் பங்கேற்றனர்
No comments: