News Just In

8/07/2024 08:38:00 PM

மட்டக்களப்பு ஏறாவூரில் வர்த்தகர் ஒருவர் அடித்துக்கொலை!





மட்டக்களப்பு ஏறாவூர் ஹிஸ்புல்லா நகரில் வர்த்தகர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளார்இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.52 வயதுடைய சேகுதாவூத் என்பவரே கொலை செய்யப்பட்டவரென அடையாளங் காணப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அவரது குடும்ப உறவினர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் இருந்த சீசீரீவி கெமராவின் ஒளிப் பதிவுக்கருவியும் கொலைகாரர்களினால் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
வர்த்தக நிலையத்தை மூடிவிட்டு அதன் அருகிலுள்ள தனது சகோதரிக்குச்சொந்தமான வீட்டில் தனியாக இருந்தவேளை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஏறாவூர் நீதிமன்ற நீதிபதி சம்பவ இடத்திற்கு வருகைதந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்;.ஏறாவூர்ப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

No comments: