இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீடத்தின் ஆங்கிலப் பாட கற்கைகள் திணைக்களம் ஒழுங்குசெய்திருந்த அக்கரைப்பற்று,கல்முனை மற்றும் கல்முனை கல்வி வலயங்களில் ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான ஈ.எல்.ரீ.பயிற்சி பாசறை பல்கலைக்கழக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
பயிற்சி பட்டறையின் இணைப்பாளர் பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி பயிற்சி பாசறையை ஆங்கில கற்கைகள் திணைக்கள தலைவி கலாநிதி எம்.ஐ.பெளசுல் கரீமா ஆரம்பித்து வைத்தார்.
கனடாவைச் சேர்ந்த பேராசிரியர் கலாநிதி ஷஹீட் அப்ரார் ஹஸன் அவர்களின் ஆங்கில அறிவின் முக்கியத்துவம் தொடர்பில் விரிவுரை இடம்பெற்றது.இதன்போது தென்கிழக்கு பல்கலைக்கழக பதில் உப வேந்தர் பேராசிரியர் கலாநிதி யூ.எல்..அப்துல் மஜீட், கலை கலாச்சார பீட பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி எம்.எம்.பாஸில், விரிவுரையாளர்களான இஸட்.ஹூருள் பிர்தெளஸ். எம்.ஏ.எம்.சமீம் உட்பட ஆங்கில ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
No comments: