News Just In

8/22/2024 08:25:00 AM

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்படவுள்ள மானியங்கள்!

கடற்றொழிலாளர்கள் மற்றும் தேயிலை உற்பத்தியாளர்களுக்கான மானியத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, கடற்றொழிலாளர்களுக்கு டீசல் மற்றும் மண்ணெண்ணெய் லீட்டருக்கு 25 ரூபாவிற்கு மானியம் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை தேயிலை உற்பத்தியாளர்களுக்கு 4,000 ரூபா உர மானியம் வழங்கவும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சலுகைகள் இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: