News Just In

8/26/2024 07:52:00 PM

கல்முனை அல் பஹ்ரியா மகா வித்தியாலய விஞ்ஞான ஆய்வுகூடத்திற்கான பொருட்கள் கையளிப்பு நிகழ்வும்.!



(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களின் விஞ்ஞான பாட செய்முறை அறிவை அதிகரிக்கும் நோக்கில் விஞ்ஞான ஆய்வுகூடத்துக்கான ஒரு தொகை பொருட்கள் பழைய மாணவ சங்கம் மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு ஆகியோரின் முயற்சியால் பெற்றுக் கொள்ளப்பட்டது.

இவற்றை பாடசாலை அதிபர் எம்.ஏ சலாம் அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு (26) ஆராதனைக் கூட்டத்தில் நடைபெற்றது.

இதன் போது பிரதி அதிபர் றினோஸா ஹஜ்மீன்,உதவி அதிபர்களான யூ.எல்.ஹிதாயா, எம்.எப்.நஸ்மியா புஹாரி, ஏ.ஆர்.எம்.முஷாஜித், எம்.எச்.ஐ.இஸ்ஸத் ஆகியோருடன் அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு செயலாளர் எஸ்.எல்.ஏ.ஹமீட், அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர் எம். முஷ்தஹீம், பழைய மாணவ சங்க செயலாளர் யூ.எல்.எம். ஹாஜா மற்றும் பொருளாளர் எஸ்.என்.ஹஸ்மி ஆகியோர் பங்குபற்றினார்கள்.

மேலும் இதற்காக நிதி உதவி அளித்த அஹ்லுல் சுன்னத் வல் ஜமாஅத் உலமா சபையினருக்கும், பழைய மாணவர்களான ஏ.எச்.ரஜாஹிர், எஸ்.எல்.அன்வர் சதாத் மற்றும் எம்.அமான் ஆகியோருக்கு பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: