News Just In

8/02/2024 02:18:00 PM

தனியார் சொகுசு பஸ் மற்றும் லொறி விபத்தில் 8 பேர் காயம்!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் பாமஸ்டன் பகுதியில் லொறி ஒன்றுடன் தனியார் சொகுசு பஸ் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் வெள்ளி கிழமை (02) காலை 8.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது . விபத்தின் போது பஸ்ஸில் பயணித்த 8 பேர் காயங்களுக்குள்ளான நிலையில் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

நுவரெலியாவில் இருந்து ஹட்டனை நோக்கி பயணித்த தனியார் சொகுசு பஸ் தலவாக்கலையில் இருந்து நுவரெலியா நோக்கி பயணித்த லொறி என்பன இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது .

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

No comments: