News Just In

8/14/2024 06:54:00 PM

40வயதிற்கு மேற்பட்ட உதைபந்தாட்ட அணிகளுக்கிடையிலான போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவு!

40 வயதிற்கு மேற்பட்ட மருதமுனை அணிக்கும், அக்கரைப்பற்று அணிக்கும் இடையிலான போட்டி சமநிலையில் நிறைவடைந்தது


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
மருதமுனை 40 வயதுக்கு மேற்பட்ட உதைபந்தாட்ட அணிக்கும், அக்கரைப்பற்று 40 வயதுக்கு மேற்பட்ட உதைப்பந்தாட்ட அணிக்கும் இடையிலான சினேக பூர்வ உதைபந்தாட்ட போட்டி மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் பாதி வேளை நிறைவடையும் வரை இரு அணிகளும் எதுவித கோளும் போடாமல் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. இடைவேளை நேரம் முடிவடைந்த பின்னர் போட்டி ஆரம்பிக்கப்பட்டு 15 நிமிடங்கள் தாண்டிய போது அக்கரைப்பற்று அணி மருதமுனை அணிக்கு எதிராக தமது முதலாவது கோளினை புகுத்த ஐந்து நிமிடங்களின் பின்னர் மருதமுனை அணி அக்கரைப்பற்று அணிக்கு எதிராக ஒரு கோளினை புகுத்தியது. இறுதியில் (01:01) என்ற கோள் சமநிலையில் போட்டி நிறைவடைந்தது.

போட்டியின் வீரர்கள் அறிமுக நிகழ்வின் போது மருதமுனை ஆபிதா ஹேண்ட்லூம் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் இஸட். என்.சுஹைப் ரூமி பிரதம அதிதியாக கலந்து கொண்டு வீரர்களுக்கு கைலாகு கொடுத்து வாழ்த்தினார்.

No comments: