News Just In

8/05/2024 02:46:00 PM

காத்தான்குடி மெளலவி பெளஸ் ஷர்க்கி எழுதிய 23 வது புத்தகமான வேந்தர் நபி புகழ் வித்திரியாஹ் கவிதை நூல் வெளியீட்டு விழா!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

எழுத்தாளரும் கவிஞரும் பண்ணூலாசி ரியருமான மெளலவி காத்தான்குடி பெளஸ் ஷர்க்கி எழுதிய 23 வது புத்தகமான வேந்தர் நபி புகழ் வித்திரியாஹ் கவிதை நூல் வெளியீட்டு விழா காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் மெளலவி ஷாஜஹான் ஹாபீஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹீர் மெளலானா பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்

இந்த நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.எச்.அஸ்பர் உட்பட எழுத்தாளர்கள் முக்கியஸ்தர்கள் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது நூலாசிரியருக்கு. காத்தான்குடி ஆலோசனைக்கும் வழிகாட்டலுக்குமான ஆலிம்கள் அமைப்பினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி சமூக கவிஞர் என்ற பட்டமும் வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டார்.

அத்தோடு வெள்ளி வெளிச்சம் ஊடக வலையமைப்பினால் அதன் பணிப்பாளர் ரியாஸ் அவர்களினாலும் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கப்பட்டது

நூல் நயவுரையை தென் கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் அரபுத்துறை பீடாதிபதி அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம்.ஜலால்தீன் நிகழ்த்தினார்

No comments: