News Just In

7/23/2024 08:55:00 AM

திறப்பனை,புஞ்சிக்குளம் பிரதேச வான் விபத்தில் இருவர் படு காயம்!



(அஸ்ஹர் இப்றாஹிம்)

ஏ 9 வீதியில் திறப்பனை ,புஞ்சிக்குளம் பகுதியில் பயணித்த வேன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரமொன்றில் மோதி திங்கள் மாலை (22) விபத்திற்குள்ளாகியுள்ளது.

இதன் போது பின் ஆசனத்தில் பயணித்த இருவர் படு காயமுற்ற நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திறப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி ஏ 9 வீதியினூடாக பயணித்த வேனே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாவும், விபத்து சம்பந்தமாக திறப்பனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படடுகின்றது.

No comments: